பனப்பாக்கத்தில் 4 வயது சிறுமி டெங்குவுக்கு பலி
நெமிலியடுத்த பனப்பாக்கத்தில் 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலூக்கா பனப்பாக்கம் கோட்டைத்தெருவைச்சேர்ந்தவர் சீனிவாசன், அரக்கோணத்தில் பிஸ்என்எல் நிறுவன துணைகோட்ட பொறியாளராகவும் அவரது மனைவி பூங்கொடி வணிகவரித்துறையில் டைப்பிஸ்டாகவும் பணியாற்றி வருகின்றனர். தம்பதியினருக்கு, 2பெண்குழந்தைகள் ,அதில், இளைய மகளான ஜீவலதா(4) கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
உடனே, அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தும் குணமாகாததால் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சையளித்தனர். அங்கும் சிறுமிக்கு காய்ச்சல் குறையவில்லை. இதனால் சென்னை ,எழும்பூரிலுள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 15த்தேதியன்று அனுமதித்தனர்.
அங்கு மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்ததில், அவர்,டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்து தொடர்ந்து அவருக்கு சிகிச்சையளித்து வந்தனர். இருப்பினும், சிறுமி ஜீவலதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் பனப்பாக்கத்தில் பெரும் சோகத்தையும் பொதுமக்களிடம் டெங்கு பரவல் குறித்த பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.