வாலாஜாபேட்டை பைக் திருடன் சிசிடிவியில் சிக்கினான்
வாலாஜாப்பேட்டை அடுத்த டோல்கேட் அருகே டீக்கடை உரிமையாளரின் பைக்கை திருடிய வாலிபரை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் கைது செய்தனர்
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை டோல்கேட் அருகே எல்லப்பன் என்பவர் டீக்கடை வைத்துள்ளார். அவரது பைக்கை கடைமுன்பாக நிறுத்தி வைத்திருந்தார். சிறிது நேரத்தில் பார்த்தபோது அவர் நிறுத்தி வைத்திருந்த பைக்கை காணவில்லை.
அதிர்ச்சியில் எல்லப்பன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் பைக் கிடைக்காததால், வாலாஜாப்பேட்டை போலீஸில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் விசாரித்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களிலுள்ள பதிவுகளை ஆய்வுசெய்தனர். அதில் , வாலிபர் ஒருவர் எல்லப்பனின் பைக்கை திருடிச்செல்வது பதிவாகி இருந்தது .
அதனைத்தொடர்ந்து வாலிபர் குறித்து நடத்திய விசாரணையில் அரக்கோணம் அடுத்த சேந்தமங்கலத்தைச் சேர்ந்த மோனிஷ்குமார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் வீட்டில் பதுக்கியிருந்த மோனீஷ் குமாரைக் கைது செய்து அங்கிருந்து 2பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரித்ததில் மோனீஷ்குமார் பல இடங்களில் பைக்திருடியிருப்பது தெரியவந்துள்ளது. .