வேளாண் மற்றும் உழவர்நலன் துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி
திமிரி அருகே பரதராமியில் வேளாண் மற்றம் உழவர்நலன் துறை சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பரதராமியில், திமிரி வட்டார வேளாண்மை வட்டார வேளாண் மற்றும் உழவர் நலன் துறை சார்பில் விவசாயிகளுக்கு, நெற்பயிரில் பூச்சிகளைக் கண்டறிதல் குறித்து செயல் விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டது.
அதில், முன்னாள் இணைஇயக்குநர்இராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நெற்பயிரில் நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் தீமை தருபவைகளைக் கண்டறிதல் மற்றும் அவற்றைக் குறித்து தெரிந்து கொள்ளுதல் ஆகிய விபரங்களை கூறி விளக்கினார்.
பின்னர் வேளாண் அலுவலர் திலகவதி பூச்சிகளைக் கட்டுபடுத்தும் முறைகளை செயல் விளக்கமாக விளக்கினார். அதில், மஞ்சள் ஒட்டு அட்டை, சூரிய விளக்கு பொறி, பைரோமன் பொறி ஆகியன செய்து காட்டினார். மேலும் பல செயல் விளக்கங்களை பயிற்சியாக விவசாயிகளிடம் செய்து காட்டினர்.
அவற்றிற்கான ஏற்பாடுகளை, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் உதயகுமார்,தமிழ்ச் செல்வி ஆகியோர்செய்தனர். முன்னதாக, பயிற்சியில் கலந்து கொண்ட அனைவரையும் தொழில்நுட்ப மேலாளர் சசிகலா வரவேற்றார்.