ஆற்காட்டில் ராகுல் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்
ஆற்காடு பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு ராகில் காந்தி பிறந்தநளைக் காங்கிரஸ் கட்சியினர் கேக் வெட்டி காங்கிரஸ் கொண்டாடினர்
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தியின் 51வது பிறந்த நாளான இன்று ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை முன்பாக கேக் வெட்டி கொண்டாடினர்.
விழாவில் மாவட்டத்துணைத் தலைவர் MBD அசேன் ஷெரிப்தலைமை வகித்தார். இளைஞர் தலைவர்செயத்முஜீத்,ஆனந்தன் முன்னிலை வகித்தனர். எழிலரசு,அமானுல்லா,ராஜா தாஹிர் பாஷா ஆகியோர் வரவேற்றனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் கேக் வெட்டினார். பின்னர் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர், முகக்கவசம், அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது. விழாவில். ஆற்காடு நகர,ஒன்றிய காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்
அதே போல வாலாஜா பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நகரத்தலைவர் மணி தலைமையில் நடந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்உல்ஏ அசேன்,கோட்டீஸ்வரன்,கதிர்வேல் மற்றும் கட்சியினர்கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.