ஆற்காடு, ரத்தினகிரி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்

ஆற்காடு, கத்தியவாடி, பூட்டுத்தாக்கு, ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளதால் அன்று மின்நிறுத்தம்;

Update: 2021-09-19 16:25 GMT

பைல் படம்.

ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த ஆற்காடு, கத்தியவாடி, பூட்டுத்தாக்கு, ஆகிய துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆற்காடு நகரம், அவுசிங்போர்டு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழனூர், ராமநாபுரம், கூராம்பாடி, உப்புப்பேட்டை, கிருஷ்ணாவரம், லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், களர், கத்தியவாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதூர், ராமாபுரம், பூட்டுத்தாக்கு, ரத்தினகிரி, கன்னிகாபுரம், சனார்பண்டை, மேலகுப்பம், கீழ்செங்காநத்தம், மேல்செங்காநத்தம் அதனை சுற்றி உள்ள இடங்களிலும், பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News