ஆற்காட்டில் பான் குட்கா வியாபாரி கைது..

ஆற்காட்டில் பான் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து வியாபாரம் செய்து வந்த வியாபாரியை கைது செய்தனர்

Update: 2021-10-05 04:28 GMT

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் கைதானவர்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு போலீசார்  பைபாஸ் ரோட்டில் ரோந்து சென்றபோது  வேப்பூரில் தனியார் திருமண மண்டபம் எதிரே சந்தேகிக்கும் விதத்தில் ஒருவர் லாரியிலிருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தார்.

அங்கு சென்ற போலீசார் விசாரித்ததில் அந்த நபர் மேல் விஷாரத்தைச் சேர்ந்த ஹலீம்பாஷா(40)என்பதும் அவர் லாரியிலிருந்து இறக்கியது தடைசெய்யப்பட்ட பான் குட்கா பொருட்கள்  என தெரியவந்த்து.

உடனே ஹலீம்பாஷாவைக் கைது செய்த ஆற்காடு போலீசார் வழக்குப் பதிந்து 15ஆயிரம். மதிப்புள்ள பான்,குட்காப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News