ஆற்காட்டில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

ஆற்காட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வாலிபரை ஆற்காடு போலீஸார் கைது செய்தனர்;

Update: 2021-07-04 15:49 GMT

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு இராதாகிருஷ்ணன் தெருவைச்சேர்ந்த ராஜேஷ்(25),  இவர் வீட்டிலேயே கஞ்சாவைப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ஆற்காடு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .

அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீஸார், ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள ராஜேஷ், வீட்டிற்குச் சென்று அவரது வீட்டை சோதனையிட்டனர்.

சோதனையின் போது மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து ராஜேஷைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags:    

Similar News