புல் அறுக்க சென்ற விவசாயி பாம்பு கடித்து உயிரிழப்பு
கலவையடுத்த வெள்ளம்பியில் புல் அறுக்கும் போது பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி பலி;
இராணிப்பேட்டை மாவட்டம் கலவையடுத்த வெள்ளம்பியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன்(35), விவசாயியான அவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில், சௌந்தர்ராஜன் மாலை தனது நிலத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, விஷப்பாம்பு அவரை கடித்துள்ளது அதனால் மயக்கமான அவரை உடனே அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சௌந்தர்ராஜன் இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து கலவைப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.