நடமாடும் கொரோனா தடுப்பூசி போடும் பணி: கலெக்டர் ஆய்வு

ஆற்காடு பெரிய அசேன் புரா பகுதியில் நடமாடும் வாகனத்தின் மூலம் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்;

Update: 2021-10-01 05:52 GMT

நடமாடும் தடுப்பூசி திட்டத்தை ஆய்வு செய்த கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

இராணிப்பேட்டை மாவட்டத்தில்  தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த கலெக்டர் பாஸ்கரபாண்டியன்  உத்தரவைத் தொடர்ந்து   சுகாதாரத் துறையை சார்பில் நடமாடும் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மருத்துவர், செவிலியர் , மருத்துவப்பணியாளர் மற்றும் உதவியாளர் கொண்ட ஒரு குழுவினருக்கு ஒரு வாகனம் என்ற அடிப்படையில் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள மக்களின் இருப்பிடங்களுக்கேச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களைக் கண்டறிந்து கொரோனா தடுப்பூசி போடும் பணி மாவட்டம் முழுவதும் 42 வாகனங்கள் மூலம்  நடந்து வருகிறது.

இத்திட்டத்தில் ஆற்காடு வட்டாரத்தில் 5நடமாடும் தடுப்பூசி போடும் வாகனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆற்காடு பெரிய அசேன்புரா பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நடமாடும் தடுப்பூசி போடும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன்  நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ்பாபுராஜ், சுகாதார மேற்பார்வையாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.  பின்னர் புதுப்பாடி, கரிக்கந்தாங்கல், ஆகிய பகுதிகளில் இருந்த வாகனங்களையும் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.

Tags:    

Similar News