ஆற்காட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஆற்காடு தோப்புக்கானாவில் பைக்கில் பதுக்கி கச்சா விற்பனை செய்த வாலிபரை கைதுசெய்தனர்.;
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு , தோப்புக்கானா சாம்பசிவம் தெருவைச் சேர்ந்த கணேஷ்(28)ஆற்காடு, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வருவதாக ஆற்காடு போலீஸாருக்கு தகவல் வந்தது.
அதன் பேரில் போலீஸார் அவனைக் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கணேஷ் ஆற்காடு கராப் தெருவிலுள்ள முட்புதரில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த போது போலீஸார் கணேஷைக் கைது செய்து பைக்கில் வைத்திருந்த ஒன்றரைக்கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.