கட்சிகொடி களவு போனதைக் கண்டித்து ஆற்காட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
ஆற்காட்டில் கம்பத்தில் பறந்த கட்சிக்கொடியை அறுத்துச்சென்ற மர்ம நபர்களை கைது செய்யக் கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்;
அதிமுக மாநில அவைத்தலைவர்மதுசூதனன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதத்தில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் அதிமுக வினர் கட்சிக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டுள்ளனர் .
அதேபோல் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கம்பத்தில் அதிமுக கொடி அரைக்கம்பத்தில் ஏற்றி பறக்க விடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மர்ம நபர்கள், அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்த கொடியை அறுத்துச் சென்றுள்ளனர். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிமுகவினர் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும், சம்பவம் குறித்து தவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இராணிப்பேட்டை மாவட்டஅதிமுக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரான ரவி தலைமையில் நூற்றுக்கும். மேற்பட்ட கட்சியினர் நடந்த சம்பவத்தைக் கண்டித்து, காவல்துறையினர் விரைந்து மர்மநபர்களை கைது செய்யவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறையினர் அதிமுவினரை முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி எச்சரிக்கை செய்தனர் அவற்றை மீறி ஒன்றுகூடி அதிமுகவினர் சமூக இடைவெளி போன்ற கொரோனா விதிகளை மதிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே நோய்த்தொற்று பரவல் ஏற்பட்ட கூடிய சூழல் நிலவியதால் அப்பகுதியில் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது.