கலவையருகே பைக் திருடிய இருவர் கைது
கலவை அருகே போலீசாரின் வாகன சோதனையில் திருடிய பைக்கில் வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கூட்ரோடு பகுதியில் கலவை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி, மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். .அப்போது பைக் ஒன்று ஆற்காட்டில் இருந்து கலவையை நோக்கி வேகமாக வந்தது .
பைக்கை மடக்கிய போலீசார் அதில் வந்த 2 பேரிடம் விசாரித்தனர். அதில் அவர்கள் , போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் இருவரும் கலவையடுத்த பென்னகர் கிராமத்தைச்சேர்ந்த அஜீத்குதார்(25),வெங்கடேசன்(23) என்பதும் ,அவர்கள் கலவை அடுத்த வேம்பியில் கடந்தவாரம் திருடுபோன பிரகாஷ் என்பவரின் பைக்கை ஓட்டி வந்தது தெரியவந்தது . இதனையடுத்து கலவைப்போலீசார் அஜீத்,வெங்கடேசன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்