அரக்கோணத்தில் ஆசிரியையிடம் செயின் பறித்த வாலிபர்கள் கைது

அரக்கோணத்தில் ஆசிரியையிடம் செயினைப் பறித்த வாலிபர்கள் செயினை அடகு வைக்க வந்த போது போலீஸாரிடம் சிக்கினர்.

Update: 2021-12-25 16:45 GMT

பைல் படம்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த  அரசுப் பள்ளி்ஆசிரியை கஜலஷ்மி(38),  அன்வர்திகான்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் ..

அவர்,கடந்த 8ந்தேதி மாலை பள்ளியிலிருந்து வழக்கம்போல ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பினார் . அப்போது பின்தொடர்ந்த வாலிபர்கள் 2பேர் வழியில் அவரை மடக்கி அணிந்திருந்த 8 சவரன் செயினைப் பறித்துச் சென்றனர்.

இது குறித்து அளித்தபுகாரின் பேரில் அரக்கோணம் தாலூக்கா போலீஸார் வழக்குப்பதிந்து இருதனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், அரக்கோணத்தில் உள்ள அடகுக் கடைக்கு நகை அடமானம் வைக்க வந்த வாலிபர் சந்தேகப்படும்படி நடந்து கொண்டதைத் தொடர்ந்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீஸார் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணைசெய்தனர்.

விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தைச் சேர்ந்த பெருமாள் (25),  சென்னைப் பட்டிணப்பாக்கத்தைச்சேர்ந்த பிரபுதேவா(26) வுடன் சேர்ந்து பைக்கில் சென்று நகைப்பறிப்பில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்தபோலீஸார் அவர்கள் வைத்திருந்த 5சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News