சாலையை சீரமைத்து தர வேண்டி போராட்டத்தில் குவிந்த பெண்களால் பரபரப்பு

ஜெய்பீம் நகரில் சாலை, அடிப்படை வசதி செய்து தரக்கோரி நகராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் போராட்டத்தில் குவிந்தால் பரபரப்பு.;

Update: 2021-08-10 06:58 GMT
நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்த பெண்கள்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜெய்பீம் நகர், மாதவநகர், காந்தி நகர் மற்றும் பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள பிரதான சாக்கடை கடந்த 2ஆண்டுகளாகியும் புதுப்பிக்கப்படாமல்  உள்ளது. மேலும், இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரியாமல் அப்பகுதி இருண்டு காணப்படுகிறது. இதனால், மழைக்காலங்களில் மழைநீர்தேங்கி தெருக்களில் பள்ளங்கள் தெரியாமல் நீர் நிரம்பி காணப்படுவதால் முதியவர்கள், குழந்தைகள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் அரக்கோணம் நகராட்சி ஆணையரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. அதன் காரணமாக அப்பகுதி பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்தனர்

திடீரென பெண்கள் கூட்டமாக அலுவலகம் முன்பு கூடியது அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து,  விரைந்த வந்த நகராட்சி மேனேஜர், பெண்களிடம் விபரம் கேட்டறிந்து நகராட்சி ஆணையரிடம் தெரிவித்து விரைவில் கோரிக்கையினை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.



Tags:    

Similar News