தேசிய குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு வரவேற்பு

தேசிய அளவில் நடந்த குத்துச் சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற அரக்கோணம் தனியார் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது;

Update: 2021-10-07 05:32 GMT

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம்  தனியார் பள்ளி மாணவ,மாணவியர்கள் 15 பேர் சமீபத்தில் உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த தேசிய அளிவிலான குத்துச்சண்டைப் போட்டியில் கலந்து கொண்டனர்.

போட்டியில்,தமிழ்நாடு, பஞ்சாப், பீகார், ஒடிசா, மத்தியபிரதேசம், அரியானா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.அதில் ,தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 120பேர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அரக்கோணம் மாணவ மாணவியர்கள் 15பேர், இறுதிப் போட்டிகளில் வென்று தங்க பதக்கத்தைப் பெற்று சாதனைப் படைத்தனர்.. 

அதனைத் தொடர்ந்து அரக்கோணம் திரும்பிய பயிற்சியாளர் பிரேம் குமார் மற்றும்  மாணவ,மாணவியர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பினை பள்ளி நிர்வாகத்தினர் ,பெற்றோர்,மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பினை அளித்தனர்.

Tags:    

Similar News