அரக்கோணம் அருகே கால்நடை மருத்துவ முகாம்: எம்எல்ஏ ரவி துவக்கி வைத்தார்
அரக்கோணம் அருகே அரிகிலபாடியில் கால்நடைமருத்துவ முகாமை எம்எல்ஏ ரவி இன்று துவக்கி வைத்தார்.;
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அரிகிலபாடியில் கால்நடை மருத்துவத்துறை சார்பில் மருத்துவமுகாம் நடந்தது. முகாமை அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி கால்நடைகளுக்கு உப்பு வழங்கி துவக்கிவைத்தார்.
முகாமில் கால்நடை உதவிமருத்துவர் சக்தி தலைமைதாங்கி கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தார் . ஒன்றிய கவுன்சிலர் வினோத்குமார்,ஊராட்சி மன்றதலைவர் வள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமிற்கு வந்த 400க்கும் மேற்பட்ட ஆடு,மாடு மற்றும் கால்நடைகளுக்கு குடற்புழு, மலட்டுத் தன்மை நீக்கம் ஆகிய பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.