தேர்தல் பறக்கும் படை பணிகளை கொடியசைத்து துவக்கி வைத்த கலெக்டர்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையாக 42 பறக்கும் படைகளின் வாகனத்தை, கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.;

Update: 2022-01-28 00:30 GMT

இராணிப்பேட்டை மாவட்டத்தில், நகர்புற உள்ளாட்சித்தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையாக 42பறக்கும் படைகள் வாகனத்தை, கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,    இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இராணிப்பேட்டை, ஆற்காடு, மேல்விஷாரம், வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 6 நகராட்சிகள் மற்றும் தக்கோலம், நெமிலி,  பணப்பாக்கம், காவேரிப்பாக்கம்,  அம்மூர், விளாப்பாக்கம், திமிரி, கலவை ஆகிய 8 பேரூராட்சிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

கண்காணிக்க குழுக்கள் அடங்கிய தேர்தல் பறக்கும் படைகள் தலா 3 என மொத்தம் 42 குழுக்கள் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த  வாகனங்களை, மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன், அவரது அலுவலக வளாகத்தில் கொடியசைத்து அனுப்பி வைத்தார்..

கண்காணிப்பு பணியில் வாகனங்கள், காலை 6மணி முதல், பிற்பகல் 2 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை,   இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை என 24மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் விதமாக ஷிப்டு முறையில்,  மூன்று குழுக்கள் ஒவ்வொரு பகுதியிலும் சோதனைகளில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags:    

Similar News