மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்துக்கொண்டிருந்த லைன்மேன் கீழே விழுந்து பலி
அரக்கோணம் அருகே தக்கோலத்தில் மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்துக்கொண்டிருந்த லைன் மேன் தவறி விழுந்து பலியானார்
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் பஜனைக் கோயில் தெருவைச்சேர்ந்த அரிதாஸ்(35). தக்கோலம் மின் வாரிய அலுவலகத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தார் . அவருக்கு ,ராசாத்தி என்ற மனைவி மற்றும் இருபிள்ளைகள் உள்ளனர்.
அரிதாஸ் அதே ஊரில் உள்ள பழனியம்மன் கோயில் அருகே உள்ள ஒருவரது வீட்டில் ஏற்பட்ட பழுதை சரிபார்க்க மின் இணைப்பைத் துண்டித்து கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கம்பத்திலிருந்து கீழே விழுந்தார்.
பலத்த காயமடைந்த அவரை,உடனே அருகிலிருந்தவர்கள் சிகிச்சைக்கு அரக்கோணம் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று பின்பு காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து, அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே அரிதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தக்கோலம.போலீஸார்வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.