ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டு பச்சையம்மன் கோயில்களில் திருட்டு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் அருகே இரண்டு ஊர் பச்சையம்மன் கோயில்களில் ஒரேநாள் இரவில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2021-08-29 17:09 GMT

அரக்கோணம் அருகே பச்சையம்மன் கோயில்களில் திருட்டு

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அவினாசி கண்டிகையில் பழமையான பச்சையம்மன் கோயில் உள்ளது . அவிநாசி கண்டிகை மற்றும் அதை சுற்றி யுள்ள கிராமத்தினரின் குலதெய்வ கோயிலாகும்.

எனவே தினசரி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்வர் . இரவுகோயிலில் பூஜைகளை முடித்த நிர்வாகி வழக்கம்போல பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

பின்பு காலை கோயில் வழியாக சென்ற பொதுமக்கள் கோயில் பூட்டு உடைக்கப்பட்டு   திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, நிர்வாகிகளுக்கு தகவல் தரப்பட்டதைத் தொடர்ந்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார்,பார்வையிட்டனர்.

அதில், கோயிலில் பொருட்கள் சிதறிக்கிடந்த நிலையில் , அம்மன்கழுத்தில் இருந்த தங்க தாலியை மர்ம நபர்கள் திருடிசென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸார் விசாரணை செய்து மர்ம நபர்களைத் வருகின்றனர்.

அதே போல மற்றொரு சம்பவமாக,தக்கோலத்தில் உள்ள பச்சை அம்மன் கோயிலிலும் மர்ம நபர்கள் பூட்டைஉடைத்து கோயில் வளாகத்தில் இருந்த உண்டியலை திருடி சென்றுள்ளனர்

இதுகுறித்து தக்கோலம் போலிசார் வழக்கு பதிவு செய்து உணடியல்திருடியமர்ம நபர்களை தேடிவருகின்றனர் ஒரே இரவில்,  அரக்கோணம் அருகே  இரண்டு ஊரிலுள்ள  பச்சையம்மன் கோயில்களில்நடந்த திருட்டு சம்பவம்,அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ..

Tags:    

Similar News