அரக்கோணத்தில் ஆட்டோ பைக்மீது மோதி தொழிலாளி பரிதாப உயிரிழப்பு

அரக்கோணம் சுவால்பேட்டையில் ஆட்டோ பைக்மீது மோதிய விபத்தில் தொழிலாளி பலியாகினார்.;

Update: 2021-08-07 15:33 GMT

பைல் படம்.

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஏஜிஎம்சர்ச்பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(46) கூலித்தொழிலாளி. அவருக்கு மனைவி 2 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், முருகன் தனது பைக்கில் தணிகைப்போளுருக்கு சென்றார் . அப்போது சுவால்பேட்டையருகே சென்றுகொண்டிருந்த  முருகனின் பைக் மீது எதிரே வேகமாக வந்த ஆட்டோ மோதியது.

அதில், பலத்த காயமடைந்த முருகனை அருகிலிருந்தவர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர், அவர்மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டுச்சென்றனர். ஆனால் வழியிலேயே முருகன் பரிதாபமாக பலியாகினார். விபத்து குறித்து அரக்கோணம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News