அரக்கோணம் அருகே மண் கடத்தல் லாரி மற்றும் பொக்லைன் எந்திரம் பறிமுதல்

அரக்கோணம் அருகே ஏரியில் சூளைக்கு மண்கடத்திய பொக்லைன் மற்றும் லாரியை வட்டாட்சியர் பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தார்.;

Update: 2021-08-02 16:56 GMT

காட்சி படம் 

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த எஸ் ஆர் கண்டிகையில் ஏரியில் மர்ம நபர்கள் சிலர் பொக்லைன் மூலம் கிராவல் மண் எடுத்து லாரியில் கடத்திச் செல்வதாகவும், அதனால் மிக ஆழமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாக அரக்கோணம் வட்டாட்சியர் பழனி ராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .

அதன்பேரில், அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் அங்கு சென்றபோது,   அங்கு பொக்லைன் எந்திரத்தின் மூலம் மண் எடுத்து லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த மர்ம நபர்கள் தாசில்தாரைப்பார்த்து தப்பி ஓடினர். உடனே வட்டாட்சியர், அங்கிருந்த லாரி மற்றும் பொக்லைன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தார்.

பின்னர் , இதுகுறித்து வட்டாட்சியர் பழனிராஜன் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் செய்து பறிமுதல் செய்த வாகனங்களை ஒப்படைத்தார். இதனையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர் .

Tags:    

Similar News