வட்டாட்சியரைக் கண்டு மணல் கடத்தல்காரர்கள் 'எஸ்கேப்': டிராக்டர் பறிமுதல்

அரக்கோணம் அடுத்த பள்ளூர் அருகே வட்டாட்சியரைக் கண்டு மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியோட்டம். டிராக்டரை பறிமுதல்.

Update: 2021-10-18 07:49 GMT

பள்ளூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்.

அரக்கோணம் அடுத்த பள்ளூர் அருகே வட்டாட்சியரைக்கண்டு மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியோட்டம டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்  தாலுகா பள்ளூர் கிராமப் பகுதியில் மணல் கடத்தி வருவதாக அரக்கோணம் தாசில்தார் பழனிராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதன் பேரில் வட்டாட்சியர் இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது பள்ளூர் - திருமால்பூர் ரோடு நீரேற்று நிலையம் அருகில் மர்மநபர்கள் கள்ளத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். அதில், வட்டாட்சியர் வருவதைக் கண்ட அவர்கள் டிராக்டரை அப்படியே விட்டு விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

உடனே வட்டாட்சியர், மணலுடன் இருந்த டிராக்டரை பறிமுதல் செய்து நெமிலி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். நெமிலி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News