அரக்கோணத்தில் ஆட்டோ டிரைவரை மிரட்டி வழிப்பறி
அரக்கோணத்தில் காஞ்சிபுரம் செல்லும் மேம்பாலம் அருகே ஆட்டோ டிரைவரை மிரட்டி பணம்பறித்த மர்ம நபரை பிடித்து போலீஸார் விசாரணை;
அரக்கோணத்திலுள்ள கிருபில்ஸ் பேட்டையை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஆனந்த். இவர் தனது ஆட்டோவில் நேற்று இரவு அரக்கோணம் காஞ்சிபுரம் மேம்பாலச் சாலையின் அருகே ஓரமாக தனது ஆட்டோவை ஓட்டிச் சென்று நிறுத்தியுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர் ஒருவன் ஆனந்தை வழிமறித்து பணம் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளான் ஆனால் ஆனந்த் பணம் தர மறுக்கவே மர்மநபர், ஆனந்தின் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தி சட்டைப்பையில் இருந்த ரூ.800-ஐ எடு்த்து கொண்டான்.
அதனை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து, அவனைப் பிடிக்க முயன்றனர் அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிவிட்டான். உடனே இச்சம்பவம் குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஆனந்த் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து வழிப்பறி செய்து தப்பியோடிய அரக்கோணம் பழனிப்பேட்டையைச் .சேர்ந்த திருமாறன் என்பவனை கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் அதேப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸார் ரோந்து சென்ற போது, அரக்கோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பழைய குற்றவாளிகள் 5 பேர் போலீஸாரைப் கண்டதும் தப்பிக்க முயன்றதில் 3 பேரை மட்டும் டவுன் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். மற்றவர்களைத் அரக்கோணம் போலீஸார் தேடிவரும் நிலையில் ,இது போன்ற வழிப்பறி இப்போது நடந்திருப்பது அப்பகுதி வழியே செல்வோர் அரக்கோணம் பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது .