நள்ளிரவில் வழக்கறிஞர் கைது: வழக்கறிஞர் சங்கத்தினர் சாலை மறியலில்
அரக்கோணம் அடுத்த அருகிலபாடியில் வழக்கறிஞரை கிராமியப் போலீஸார் நள்ளிரவிவில் கைது செய்ததைக் கண்டித்து சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அருகில்பாடி கிராமத்தைச் சேர்ந்தவழக்கறிஞர் டில்லிபாபு ,அவருக்கும் , அருகிலபாடி பஞ்சாயத்து தலைவர் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது ..
இதன் காரணமாக டில்லிபாபு மீது பஞ்சாயத்து தலைவர் அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் கிராமியப்போலீஸார் டில்லிபாபு மீது வழக்குப்பதிவு செய்து அதிகாலை 4:00 மணி அளவில் அருகிலபாடியில் உள்ள வழக்கறிஞர் டில்லி பாபு வீட்டுக்கு சென்று கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது கைதை கண்டித்து டில்லிபாபு மற்றும் உறவினர்கள் காவலர்களின் செயல்களை செல்போனில் வீடியோ செய்தனர்.
அப்போது செல்போன்களை பறித்துக் கொண்ட போலீஸார் வழக்கறிஞர் டில்லிபாபுவை தரக்குறைவாக பேசியதாகவும் உடையைப் பறித்து போலீஸார் இழுத்ததாகவும் இருதரப்பினருக்கும் சலசலப்பு ஏற்பட்டதாாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து , ஊராட்சி மன்ற தலைவர் புகாரின் அடிப்படையில் நள்ளிரவில் வழக்கறிஞரை கைது செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று அரக்கோணம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர், அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளரிடம் முறையிட அவரது அலுவலகத்திற்கு சென்றனர்..
ஆனால், டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் வழக்கறிஞர்களை புறக்கணித்ததாகவும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. கைது குறித்து முறையிட வந்த வழக்கறிஞர்கள் சங்கத்தினரை டிஎஸ்பி அவமதிப்பு செய்ததாக வழக்கறிஞர்கள் டிஎஸ்பியைக்கண்டித்து அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அரக்கோணம்- திருத்தணி சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் வழக்கறிஞர்கள் டிஎஸ்பி புகழேந்தி கணேசனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும். , எந்த முகாந்திரமும் இல்லாமல் வழக்கறிஞரை அதிகாலை நேரத்தில் கைது செய்த போலீஸார் மீதுவழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் ,மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை சமாதானப் படுத்தி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். இந்த மறியல் போராட்டம் காரணமாக அரை மணி நேரத்திற்குமேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.