அரக்கோணத்தில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: நகராட்சி நடவடிக்கை
அரக்கோணம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்றும் பணியில் நகராட்சி ஈடுபட்டுள்ளது
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள வீட்டு வசதிவாரியம் உள்ளது. அப்பகுதி 80அடி அகலமான சாலையில் கடைகள் மற்றும் வீடுகள் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டு சாலை குறுகியுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டது.
எனவே அவற்றை அகற்றக்கோரி பல்வேறு தரப்பினர் புகார் எழுப்பி இது குறித்து நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது
அதன்பேரில் ஆணையர் (பொறுப்பு )ஆசிர்வாதம் சம்பந்தபட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியப்பகுதியில் உள்ள சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளான் கடைகள்,கட்டிடங்கள் அனைத்தையும் ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றி வருகின்றனர். அவற்றிற்கு அரக்கோணம் டவுன் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
பொதுமக்கள் பணியில் ஈடுபட்டு வரும் நகராட்சி ஊழியர்களை பாராட்டி வருகின்றனர்