அரக்கோணம் இரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பீரேந்தரகுமார் ஆய்வு
பெண் பயணிகள் பாதுகாப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என அரக்கோணத்தில் ரயில்வே பாதுகாப்பு படையின் ஐஜி பீரேந்தரகுமார் பேட்டி.;
அரக்கோணம் இரயில்நிலையத்தில் இரயில்வே பாதுகாப்புபடை ஐஜி பீரேந்தரகுமார் ஆய்வுசெய்தார். கொரோனா ஊரடங்கின் போது ரயிலில் கடத்திவரப்பட்ட நான்காயிரம் லிட்டர் மதுபானம் மற்றும் ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா, வெள்ளி கட்டிகள் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், பெண் பயணிகள் பாதுகாப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என அரக்கோணத்தில் ரயில்வே பாதுகாப்பு படையின் ஐஜி பேட்டி.
தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் ஜஜி பீரேந்திர குமார் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ரயில்வே பாதுகாப்பு படை போலிசாரிடம் குறைகளையும் அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
கொரோனா தொற்றின் காரணமாக ரயில்வே பாதுகாப்பு படையினர் 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் குடும்பத்திற்கு தலா 15 லட்சம் ரூபாய் என சிறப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டதாகவும். ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் 95% தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
கொரோனா காலத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஊரடங்கின் போது ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 4 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மது பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் ரயில்களில் கடத்தப்பட்ட கஞ்சா, வெள்ளிக்கட்டிகள், என பல கோடி ரூபாயை மதிப்பு பொருள்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விரைவில் நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் அரக்கோணத்தில் மட்டும் 65 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு எந்த விதமான அசம்பாவிதம் நடக்க வண்ணமும் கூடுதல் கவனம் செலுத்தப்படும். ரயில்வே பாதுகாப்பு படையில் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், முதல் நிலைக் காவலர்கள் என 700 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது பயிற்சி முடிந்ததும் அவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் அப்போது ஆள் பற்றாக்குறை பிரச்சினை தீர்வு காணப்படும் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.