அனவர்திகான்பேட்டை இரயில் நிலையத்தில் சீசன் டிக்கெட் வழங்கக் கோரி மறியல்

அரக்கோணம் அருகே அனவர்திகான் பேட்டை இரயில் நிலையத்தில் சீசன் டிக்கெட் வழங்கக் கோரி பொதுமக்கள் இரயில் மறியல் போராட்டம்

Update: 2021-07-26 07:58 GMT

அனவர்திகான்பேட்டை இரயில் நிலையத்தில் சீசன் டிக்கெட் வழங்கக் கோரி பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அனவர்திகான்பேட்டை இரயில் நிலையத்தையொட்டி உள்ள அனவர்திகான் பேட்டை, குன்னத்தூர், மின்னல், காட்டுப்பாக்கம், மேலேரி, மேல்களத்தூர் உள்ளிட்ட சுமார்25க்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து பொது மக்கள் வேலைக்கு சென்னை மற்றும் அரக்கோணம் ஆகிய ஊர்களுக்கு அனவர்திகான் பேட்டை இரயில் நிலையத்திலிருந்து பல ஆண்டுகளாக சென்று வருகின்றனர் .

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக  அனவர்திகான் பேட்டை இரயில் நிலையத்தில் பயணச்சீட்டு,  சீசன் டிக்கெட் மற்றும் புக்கிங் டிக்கெட் ஆகியவை வழங்கப்படுவதில்லை. இதனால், இரயிலில் தினசரி பயணிக்கும் மக்கள் சீசன் டிக்கெட் பெற அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அப்பகுதியினர் அனவர்திகான் பேட்டை இரயில் நிலையத்தில் புக்கிங் வசதி மற்றும் சீசன் டிக்கெட் வழங்க கோரி பலமுறை இரயில்வே அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் .

அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் பொதுமக்கள் அனவர்திகான் பேட்டை இரயில் நிலையத்திற்கு   ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது .  அப்போது மக்கள் இன்ஜின்  முன்பாக  அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு சென்ற, அரக்கோணம் வட்டாட்சியர், டிஎஸ்பி புகழேந்தி கணேசன் ஆகியோர்  மறியலில் ஈடுபட்டவர்களிடம. பேச்சு வார்த்தை நடத்தினர் அதில், சுமூகத்தீர்வு ஏற்பட்டதையடுத்து பொது மக்கள் மறியலை கைவிட்டனர்.

மறியல் காரணமாக சுமார் 2மணிநேரத்திற்கும் மேலாக இரயில் அங்கேயே நின்றது. இதனால் இரயிலில் சென்ற அரசு ஊழியர்கள்,பொது மக்கள்  பெரும் அவதிக்குள்ளாகினர்.

Tags:    

Similar News