அரக்கோணம் துணை மின் நிலைய பகுதியில் நாளை மின்தடை

அரக்கோணம் துணை மின் நிலையம் பகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-03-14 16:40 GMT

இராணிப்பேட்டை மாவட்டம் கோட்ட செயற் பொறியாளர் எஸ். கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட துணை நிலையங்களின் மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில்  மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பள்ளூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளூர், கம்மாவார்பாளையம், கோவிந்தவாடி, அகரம், திருமால்பூர், கணபதிபுரம், சேந்தமங்கலம், சயனபுரம், நெமிலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தக்கோலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தக்கோலம், சி.ஐ.எஸ்.எப், அரிகிலபாடி, சேந்தமங்கலம், புதுகேசாவரம்,அனந்தபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

புன்னை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட புன்னை, காட்டுப்பாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்தூர், எலத்தூர், கீழ்வெங்கட்டாபுரம், வேட்டாங்குளம், மேலேரி,சிறுணமல்லி, சம்பந்தராயன்பேட்டை மற்றும் சுற்றியுள்ள அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

Tags:    

Similar News