25 ஆண்டுகளாக பூட்டி கிடந்த வீட்டில் நள்ளிரவில் பூஜை: போலீஸார் விசாரணை
அரக்கோணம் அருகே 25 ஆண்டுகளாக பூட்டியிருந்த வீட்டில் நடந்த பூஜை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கிழவனம் கிராமத்தில் பல ஆண்டுகளாக பூட்டிகிடந்த வீட்டிற்குள் நள்ளிரவில் வீீீ்ட்டிற்குள் பள்ளம் தோண்டி நரபலி கொடுக்கப்பட்டு புதையல் எடுக்க பூஜை நடந்து வருவதாக பொதுமக்கள் பீதியடைந்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தெரிவித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பூஜை செய்து கொண்டிருந்த வீட்டு உரிமையாளர் ஆசீர்வாதம்(51), என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர் .
அதில் முதற்கட்டமாக, போலீஸாரிடம் ஆசிர்வாதம்,தான் லாரி டிரைவராக இருந்து வருவதாகவும் , தற்போது அரக்கோணம் அருகே உள்ள முசல்நாயுடு கண்டிகையில் வசித்து வருவதாகவும், மூன்று மகள்கள் உள்ள நிலையில்,இரண்டாவது மகளின் கணவர், கடந்த மாதம் மாரடைப்பால் இறந்து விட்டதால், மகளை பூர்வீக வீடான கிழவனம் வீட்டில் குடியமரத்துவதற்காக வீட்டை சுத்தம் செய்து வருவதாகவும் கூறினார்
மேலும் கடந்த 25 ஆண்டுகளாக வீடு பூட்டியிருந்ததால் அந்த வீட்டில் பேய் உள்ளதாகவும், அதனை விரட்ட வேண்டும் என்று மந்திரவாதி ஒருவர் தெரிவித்ததைத் தொடர்ந்து நள்ளிரவில் பேயை விரட்ட வீட்டிற்குள் இரண்டு அடி பள்ளம் எடுத்து பூஜைகள் செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், போலீஸார்புதையல் எடுக்க வீட்டிற்குள் பள்ளம் தோண்டி, பூஜைசெய்து ,நரபலி கொடுக்கப்பட்டு இருக்குமா?என்ற கோணத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
பூட்டியவீட்டிற்குள் பூஜை நடந்த இச்சம்பவம் அப்பகுதிமக்களிடையே பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது..