அரக்கோணத்தில் சைபர்கிரைம் போலீஸ் என்று ரூ3லட்சம் வழிப்பறி

அரக்கோணத்தில் சைபர் கிரைம் போலீஸ் என்று கூறி ரூ3 லட்சத்தை வழிப்பறி செய்த வழக்கில் போலீசார் 5 பேரைக் கைது செய்தனர். .

Update: 2021-12-04 14:10 GMT

சைபர் க்ரைம் போலீசார் போல நடித்து வழிப்பறி செய்தவர்கள் 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் என்பவர் அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் தன்னிடமிருந்து மூன்று லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் எனக் கூறி பறித்துச் சென்றதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தப் போலீசார் விசாரணைசெய்து வந்தனர்

அதில்,தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசத்தை சேர்ந்த தினேஷ் குமார்(34) என்றும்    தான்  கோயில் கட்டும் பணி ஒப்பந்ததாரராக உள்ளதாகவும் தன்னிடம் கடந்த சிலநாட்களுக்கு முன்பாக அரக்கோணத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்  பணம் கொடுத்தால்    இரட்டிப்பு செய்து  தருவதாகவும் ஆசைவார்த்தை கூறி  பணம்  கொண்டு வருமாறு போன் மூலம்  அழைத்ததாகக் கூறினார்

 எனவே ,அதனை நம்பி தினேஷ்குமார் ரூ3 லட்சத்துடன் அவரது உறவினர் ஆனந்தனை அழைத்துக்கொண்டு திருத்தணி வந்துள்ளார்.

அங்கு, காரில் மர்மநபர்கள் 3 பேருடன் தயார் நிலையில் இருந்து தினேஷ்குமார் மற்றும் ஆனந்தனை ஏறிக்கொண்டு அரக்கோணத்திற்கு வந்தனர்.

அங்கு,  திடீரென  வேறொரு காரில் வந்த 3 பேர் ,தினேஷ் குமார்வந்த காரை வழிமறித்து தங்களை சைபர் கிரைம் போலீசார் என்றும் பணம் மாற்ற வந்தது குறித்து  தங்களுக்கு ரகசிய தகவல் வந்ததாகக் கூறினர். மேலும் தினேஷ் குமார் மற்றும் ஆனந்தன் ஆகியோரைமிரட்டி அவர்கள் வந்த காரில் ஏற்றி கொண்டு சென்றனர்.

பின்னர் ,வழியில் மர்மநபர்கள் ,பணம் கொண்டுவந்த இருவரையும் மிரட்டி ரூ3 லட்சத்தை பிடுங்கிக்கொண்டு காரிலிருந்து  வழியிலேயே இறங்கி விட்டு கார் சென்று விட்டதாகவும் விசாரணையில் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து போலீசார் மர்ம நபர்கள்குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில்  தினேஷ்குமாரிடம் பணம் பறித்துச் சென்ற மர்ம நபர்களான   அரக்கோணத்தைச் சேர்ந்த பாலா என்கிற பாலசுப்பிரமணி ,தீனதயாளன், ஹம்நாத் ,மார்ட்டின் மற்றும் குட்டி(எ)சாம்ராஜ் ஆகியோரை கைது செய்தனர்..

Tags:    

Similar News