சாலையில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த வார்டு உறுப்பினர்
அரக்கோணம் அருகே சாலையில் கிடந்த ரூ.25 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த வார்டு உறுப்பினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது;
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் வங்கி உள்ளது. அதன் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.25 ஆயிரத்தை பெருமூச்சி ஊராட்சி மன்ற 12-வது வார்டு உறுப்பினர் ஜாபர் ஷெரிப் அப்பணத்தை மீட்டு அரக்கோணம் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் முன்னிலையில் அரக்கோணம் டவுன் காவல் உதவி ஆய்வாளர் முத்துவிடம் ஒப்படைத்தார்.
ஜாபர் ஷெரிப்பை டி.எஸ்.பி. பொன்னாடை அணிவித்து புத்தகப் பரிசு வழங்கி பாராட்டினார்.