ஊராட்சி தலைவர் வேட்பாளர் மாரடைப்பால் திடீர் மரணம்

நெமிலி அருகே பள்ளூர் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார்.

Update: 2021-10-09 07:00 GMT

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இராண்டம் கட்டமாக  அரக்கோணம், சோளிங்கர் ,காவேரிப்பாக்கம் ,நெமிலி ஆகிய 4 ஒன்றியங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்துவருகிறது.

இதில் ,நெமிலி ஒன்றியத்தில் 47 ஊராட்சி மன்ற தலைவர் பதவியும் 19 ஒன்றிய கவுன்சிலர்கள்,2 மாவட்ட கவுன்சிலர்கள்,மற்றும்  351 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்  பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது

இந்த நிலையில் நெமிலி அடுத்த பள்ளூர் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு மூன்று பேர் போட்டியிட்டனர். அவர்களனைவரும் கடந்த சில வாரங்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதில், பள்ளூர் ஊராட்சி மன்ற தலைவராக ஏற்கனவே இருந்த மணி(68) என்பவர்மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் மணிக்கு லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே,அவரது குடும்பத்தினர் அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மணி இறந்து விட்டதாக தெரிவித்தனர் .

தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளரும் முன்னாள் தலைவராக இருந்த மணி மாரடைப்பால் இறந்த சம்பவம் பள்ளூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வேட்பாளர் இறப்பு குறித்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர்மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பள்ளூர் தலைவர்பதவிக்கு போட்டியிட்டுள்ள மற்ற இரு வேட்பாளர்களை போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டு தற்போது  தேர்தல் நடந்து வருகிறது

Tags:    

Similar News