அரக்கோணம் அருகே நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை
அரக்கோணம் அருகே தண்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் தேங்கியதால் விவசாயிகள் வேதனை;
அரக்கோணம் அடுத்த தண்டலம் பகுதியில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் விவசாயிகள் பயிரிடப்பட்ட நெல்லை கடந்த ஏப்ரல் முதல் கொள்முதல் மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்குள்ள அலுவலர்கள் நெல்லை கொள்முதல் செய்யவில்லை. இதனால் கொள்முதல் நிலையத்தில் கடந்த 40 நாட்களாகசுமார் 1.5 டன் அளவிற்கு நெல் குவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கொள்முதல் நிலையத்தில் உள்ள அலுவலர்களிடம் கேட்டால் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு எடுப்பதாக கூறினர். அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன் கேட்டபோது விவசாயிகளை மிரட்டும் வகையில் அங்குள்ள அலுவலர்கள் பேசுகின்றனர். எங்களிடம்நெல்லை கொள்முதல் செய்யாமல் வியாபாரிகளிடம் கொள்முதல் செய்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
கொரோனா காலத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கிடையில் பயிரிடப்பட்ட நெல், கொள்முதல் நிலையத்திலேயே மழையிலும்,வெயிலிலும் வீணாகிறது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விவசாயிகளின் கஷ்ட நிலைகளை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருத்தமுடன் கூறினார்கள்.