கனமழை முன்னெச்சரிக்கைப் பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் .
அரக்கோணத்திலிருந்து தேசியபேரிடர் மீட்பு படையினர் கனமழை முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளுக்குச் சென்றுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக கனமழை,மற்றும் மிதமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னையை மற்றும் அதனைச்சுற்றியுள்ளப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தவண்ணம் உள்ளது.
அதனால் வீடுகள்,சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டுள்ளதால் அங்கு ரெட்அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.. தொடர்ந்து மழை பாதிப்புகளை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், அருகிலுள்ள செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஆகிய ஏரிகளில் நீர் நிரம்பியும் தொடர்ந்து நீர்வரத்து காரணமாக உபரிநீர் வெளியேற்றம் செய்யப்படுள்ளது. எனவே வெள்ளநீீீீர் செல்லும். பகுதிகளில் அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கைப் பணிகள் நடந்துவருகிறது.
அதேபோன்று,திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி கால்வாய், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகள் மற்றும். மீட்பு பணிகளுக்காக மாநில பேரிடர் மீட்பு ஆணைய தேசிய பேரிடர் மீட்பு படையிடம் உதவி கோரியது. அதனைத்தொடர்ந்து இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர்மீட்பு படை மையத்திலிருந்து கமாண்டர் ரேகா நம்பியார் உத்தரவின்பேரில் தலா 20 வீரர்கள் கொண்ட 4 குழுக்கள்அமைக்கப்பட்டது.
பின்னர் குழுக்கள் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுக்களும் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு 2 குழுக்களும் தனித்தனி ட்ரக்குகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் வீரர்கள் தங்கள் மீட்பு பணிகளுக்குத் தேவையான அனைத்து உபகரனங்களையும்கொண்டு சென்றனர்.