அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஒற்றுமை ஓட்டம்
அரக்கோணத்தில், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் பங்கேற்ற, ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது.
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடரின் 4வது பட்டாலியன் உள்ளது . அதில் நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை அம்ரித் மகோத்சவ் விழாவாக தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். விழாவின் ஒருபகுதியாக, நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், ஒற்றுமை ஓட்டம் நிகழ்ச்சி நடந்தது.
அதன்படி, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை மையத்தில் இருந்து துவங்கிய ஒற்றுமை ஓட்டம், பெரிய களகாட்டூர் வரை 5 கி மீ தூரத்திற்கு சென்றது. இதில், 100க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு ஓடினா். முன்னதாக . தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைமை மருத்துவ அலுவலர் சந்தீப் ராய் மற்றும் துணை கமாண்டன்ட் ராஜன் பாலு ஆகியோர், ஒற்றுமை ஓட்டத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.