அரக்கோணம் அருகே ஒரே இரவில் 2 வீடுகளில் பணம், நகை கொள்ளை: பீதியில் பொதுமக்கள்

அரக்கோணம் அருகே ஒரே இரவில் 2 வீடுகளில் பணம், நகை கொள்ளையடித்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.;

Update: 2021-09-05 16:30 GMT

பைல் படம்.

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் வள்ளி கூலிவேலை செய்து வருகிறார். இவர் வேடலில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்றுவீடு திரும்பியுள்ளார்.

அப்போது, வீட்டின் கதவுக்கு மேல் உள்ள பகுதி பிரிக்கபட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வள்ளி, உள்ளே சென்று பார்த்ததில்  அவர் வைத்திருந்த 2 சவரன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடு போயுள்ளது. 

இந்நிலையில், அதேபகுதியில் பூட்டியிருந்த மாரி என்பவரின் வீட்டிலும் மரம் நபர்கள் நுழைந்து பெட்டியிலிருந்து ரூ.2 லட்சம் மற்றும் அரை சவரன் நகையைத்  திருடிச் சென்றுள்ளனர். 

இதுகுறித்து அரக்கோணம் தாலூகா போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்கு பதிந்து மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

அருகருகே உள்ள இருவீடுகளில் ஒரே இரவில் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிரச்சியையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News