அமைச்சர் காந்தி தலைமையில் பசுமை வீடு கட்ட பூமிபூஜை
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் மூலம் பார்வையற்ற இளைஞருக்கு பசுமை வீடு கட்ட அமைச்சர் காந்தி தலைமையில் பூமிபூஜை;
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (28) பார்வையற்ற இளைஞர் ,இவர் தனது தாயுடன் மழையில் குடிசை வீட்டில் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும், தனக்கு வீடு கட்டி தருமாறு உங்கள் தொகுதியில் முதல்வர் திட்ட தனிப் பிரிவுக்கு போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அதனைத் தொடர்ந்து இளைஞரிடம் அமைச்சர் காந்தியின் எண்ணை வழங்கி அவரிடம் பேசுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் இளைஞர்தனது நிலைமையை குறித்து அமைச்சர் காந்தியிடம் போனில் விளக்கினார். இதனையடுத்த அவருக்கு உடனே பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்ட நடவடிக்கையை எடுத்தார் .
இந்நிலையில் பார்வையற்ற இளைஞர் கன்னியப்பனின் குடிசையருகே அவருக்கு பசுமை வீடு கட்டும் பணிக்கான பூமி பூஜை அமைச்சர் காந்தித் தலைமையில் நடந்தது . அப்போது ,அமைச்சர் காந்தி அந்த இளைஞருக்கு மாலையணிவித்து வாழ்த்துகளைக் கூறினார்.
விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்..