அரக்கோணத்தில் சென்னைப் பேராயம் சார்பில் நல உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினர்

அரக்கோணம் அம்மனூர் சிஎஸ்ஐ தூய பேதுரு ஆலயத்தில் சென்னைப் பேராயம் சார்பில் நல உதவிகளை அமைச்சர்கள் காந்தி,அன்பில் மகேஷ் ஆகியோர் வழங்கினர்

Update: 2021-12-13 11:21 GMT

அம்மனூர் தேவாலயத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சர் அன்பில் மகேஷ்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அம்மனுர் பகுதியில் சி.எஸ்.ஐ தூய பேதுரு ஆலயம் வளாகத்தில் சென்னைப் பேராயம் சார்பில் 10,000 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், தென்னிந்திய திருச்சபையின் சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் தலைமை தாங்கினார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்ஆர். காந்தி ஆகியோர் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டு கலந்து கொண்டனர். பின்னர்,பெட்ஷீட் துணிகள்,வளர்ப்புக் கோழிக்கூடைகள்,ஆடு, உள்ளிட்ட நல உதவிகளை வழங்கித் துவக்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி 12 மாவட்டங்களில் சோதனை முறையில் துவங்கப்பட்டது இத்திட்டமானது அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ஜனவரி மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி சாரா கல்வி முறையின் மூலமாக அனைத்து கிராமப்புற பகுதியில் எழுத்தறிவு இல்லாத மக்களுக்கு கைநாட்டு இல்லாத ஒரு முறையை கொண்டு வதற்கான திட்டமிட்டுள்ளதால் அனைவருக்கும் கிராமப்புறங்களில் சென்று கையெழுத்து போட கற்றுக் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி கூறுகையில் தமிழக அரசின் சீரிய திட்டத்தின் மூலமாக தனியார் பள்ளிகளில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் தற்போது அரசு பள்ளியை நாடி வருகின்றனர். கல்வியாளர் பாராட்டும் விதத்தில் தமிழகஅரசு  திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

விழாவில் திருச்சபை ஆயர்கள், பொதுமக்கள் பலர்கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News