அரக்கோணம் அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த வீட்டில் ஐஜி ஆய்வு
அரக்கோணம் அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த வீட்டில் ஐஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார்;
அரக்கோணம் அருகே மர்மநபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த வீட்டில் ஐஜி ஆய்வு செய்தார்.
அரக்கோணம் அடுத்த கன்னிகா புரத்தில் தனியாக இருந்த வீட்டிற்கு இரவில் மர்ம நபர்கள் துப்பாக்கியைக் காட்டி பணம்,நகை கொள்ளையடித்து சென்ற வீட்டை வடக்கு மண்டல ஐஜி ஆய்வுசெய்தார்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அவினாசிகண்டிகை அருகே கன்னிகாபுரம் கண்டிகை பகுதி சேர்ந்த புஷ்கரன் ஆடிட்டராக உள்ள இவர் ,அங்குள்ள உள்ள மாந்தோப்பு பக்கத்தில் தனியாக வீடுகட்டி வசித்து வருகிறார் .
இந்நிலையில், கடந்த 18ம்தேதி இரவு மர்ம நபர்கள் கைத்துப்பாக்கி (ஸ்போர்ட்ஸ் கன்) கத்தி ஆகியவற்றுடன் புஷ்கரன்வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் , புஷ்கரன் அவரது தாயார் சுதா (52 )பெரியம்மா லதா( 56) ,பாட்டி ரஞ்சிதா( 75 ,) ஆகியோரைத்தாக்கி வீட்டிலிருந்த 25 சவரன் தங்க நகை மற்றும்ரூ, 60 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும் கொள்ளையடித்த பின்பு வீடு முழுவதும் மிளகாய்ப்பொடி தூவியும் தடயங்களை அழிக்கும் விதமாக டூத்பேஸ்டுமற்றும் ஷாம்புகளைத் தெளித்து விட்டு தப்பியோடினர் .
இதுதொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் நகர போலீஸார் வழக்குபதிந்துள்ளனர்மேலும் அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத்தொடர்ந்து தனிப்படைகள அமைக்கப்பட்டு கொள்ளைய்ர்களை தேடிவருவதாக இராணிப்பேட்டை எஸ்பி தீபாசத்தியன் தெரிவித்தார்.
இந்நிலையில் வடக்கு மண்டல காவல்தலைவர் சந்தோஷ்குமார், வேலூர் சரக காவல் துணைத் தலைவர் பாபு மற்றும் மாவட்ட எஸ்பி தீபாசத்தியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அரக்கோணம் டி எஸ்பி, புகழேந்தி கணேஷ், டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீஸார் உடனிருந்தனர்.