அரக்கோணம் அருகே ஏரியில் குளித்த ஓட்டல் தொழிலாளி நீரில் மூழ்கி பலி
அரக்கோணம் அருகே ஏரியில் குளித்த ஓட்டல் தொழிலாளி நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சித்தேரியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர்( 24), திருமணமாகாதவர், இவர் அதே பகுதியில் உள்ள உணவகத்தில் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்,அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர் மதன் என்பவருடன் சேர்ந்து தற்போது நிரம்பி உள்ள அவ்வூர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடிரென ஸ்ரீதர் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.அதைக் கண்டு திடுக்கிட்ட மதன் அதிர்ச்சியில் அருகில் மீன் பிடித்துக் கோண்டிருந்தவர்களை அழைத்து நீரில் மூழ்கிய ஸ்ரீதரைக் காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார்
உடனே வந்த அவர்கள் ஏரியில் குதித்து ஸ்ரீதரை காப்பாற்றமுயன்றனர். அதற்குள் நீரில் மிதந்த அவரை மீட்டு கரைக்கு கொண்டுவந்து பார்த்தனர் அதில் ,ஸ்ரீதர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
மேலும், இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் தாலூக்காப் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஸ்ரீதரின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்பு சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.