அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.

சித்தேரி ரயில் நிலையம் அருகே இணைப்பு பாதையில் சென்ற சரக்கு ரயில் பெட்டிகளுக்கிடையே பசுமாடு சிக்கியதில் பெட்டிகள் தடம் புரண்டன

Update: 2021-12-20 08:45 GMT

சரக்கு ரயிலில் மாடு சிக்கியதால், பெட்டிகள் தடம் புரண்டன

\வேலூர் மாவட்டம்  ஜோலார்பேட்டை யிலிருந்து ரேணிகுண்டாவிற்கு  60 பெட்டிகளுடன்  சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. வழியில் ,சித்தேரி ரயில் நிலையத்தில் உள்ள இணைப்புபாதையில்  செல்ல  சரக்கு ரயிலை பாதை மாற்றம் செய்யப்பட்டது .

இதனையடுத்து ,இணைப்பு பாதையில் சரக்கு ரயில்   சென்றுகொண்டிருந்தது. அப்போது  பெட்டிகள் குறுக்கே சென்ற பசுமாடு சிக்கியது .

அதில் சரக்கு ரயிலில் இணைக்கப் பட்டுள்ள 11,12 பெட்டிகள் இரண்டும் தடம் புரண்டு  விபத்துக்குள்ளானது. உடனே ரயில்வே அதிகாரிகள் தகவலறிந்து   சம்பவ இடத்திற்கு  சென்று சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சரக்கு ரயில் ,   இணைப்பு பாதையில் தடம் புரண்டதால் போக்கு வரத்து பாதிப்புகள் எதுவும் இல்லை என அதிகாரிகள்  தெரிவித்தனர்

Tags:    

Similar News