ராஜாளி ஹெலிகாப்டர் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியில் பொன்விழா கொண்டாட்டம்.
அரக்கோணத்தில் உள்ள ராஜாளி ஹெலிகாப்டர் பயிற்சிபள்ளியின் பொன்விழா கொண்டாட்டத்தில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது..
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தேசிய கடற்படையின் விமான தளமான ஐஎன்எஸ் ராஜாளியில்,வீரர்களுக்கான ஹெலிகாப்டர் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி இயங்கிவருகிறது. அதன் ,50வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் நடந்தது.
விழாவிற்கு தேசிய கடற்படை விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பிரிவு தலைமை தளபதி தலைமை தாங்கி, பொன்விழா நினைவாக சிறப்பு தபால் தலை ஒன்றை வெளியிட்டார்..
பின்னர், வீர்ர்களின் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து நடந்த பைக் பேரணியில் வீரர்கள் பலர்கலந்து கொண்டனர்.