தமிழகத்தில் தாமரை மலரவே மலராது: சீமான் பேச்சு..
தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என அரக்கோணத்தில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் சீமான் பேச்சு;
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிடுகிறது. இரண்டாவது கட்ட பரப்புரையாக அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் மாவட்ட திருத்தணி தொகுதி வேட்பாளர் அகிலா மற்றும் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அபிராமி ஆகியோரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில். குழந்தைகளை பெற்று எங்கள் கையில் கொடுங்கள் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்தும் இலவசமாக கற்பித்து நாங்கள் உங்களிடம் ஒப்படைக்கிறோம்...
பிரதமர் மோடி முகத்தில் தாடி வளருமே தவிர தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பு இல்லை..
ஒருவேளை நாங்கள் ஆட்சி கட்டிலில் அமர்ந்தோம் என்றால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் அரசு மருத்துவமனையை மட்டுமே நாடவேண்டும் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்படும். தமிழகம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும். தமிழக மக்களுக்கு இலவசமாக வீடு தேடி குடிநீர் வழங்கப்படும். குடிநீர் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது அந்நிய நாட்டு குளிர்பானங்களும் தமிழகத்தில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என பேசினார்.