அரக்கோணம் நகராட்சி: ஒரு கண்ணோட்டம்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் அரக்கோணம் முதல் நிலை நகராட்சி ஆகும்
அரக்கோணம் நகராட்சி 01.10.1958 அன்று மூன்றாம் தர நகராட்சியாக அமைக்கப்பட்து. 01.05.1974 முதல் இரண்டாம் தர நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. பின்னர் 174.04.1984 அரக்கோணம் நகராட்சி முதல் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. அரக்கோணம் நகராட்சியின் மொத்த பரப்பளவு 9.06 ச.கி.மீ ஆகும்
அரக்கோணம் நகராட்சி 36 வார்டுகளை கொண்டது. இதில் 5 வார்டுகள் எஸ்சி பொது , 5 வார்டுகள் எஸ்சி பெண்கள் , 13 வார்டுகள் பெண்கள் பொதுப்பிரிவு , 13 வார்டுகள் பொதுப்பிரிவு ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நகராட்சி தலைவர் பதவி பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
எஸ்சி பொது வார்டு எண்கள் 36 7, 9, 24, 27, 32
எஸ்சி பெண்கள் வார்டு எண்கள் 8, 10, 28, 31, 36
பெண்கள் பொதுப்பிரிவு வார்டு எண்கள் 5, 11, 12, 14, 15, 16, 18, 19, 20, 22, 29, 33, 34