இருப்பிடத்திற்கே சென்று இருளர் இன ஜாதி சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்

அரக்கோணம் அருகே சாதிச்சான்று கேட்டு மனுசெய்த இருளர் இனத்தவர்களுக்கு சான்றிதழ்களை இருப்பிடத்திற்கே சென்று வழங்கிய கலெக்டர்;

Update: 2022-01-22 13:09 GMT

இருளர் இன மக்களுக்கு இல்லம் தேடி சாதி சான்றிதழ் வழங்கிய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் 

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாழ்வாதாரமிழந்து வசித்துவரும் இருளர் சமுதாய மக்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன்   தொடர்ந்து சந்தித்து குறைகளை கேட்டறிந்து அவர்களின் இல்லங்களைத்தேடிச்சென்று பொங்கல் தொகுப்பு மற்றும் நிவாரண உதவிகளை செய்து வருகிறார்.

மேலும்  தனிகவனம் செலுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் விதமாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தும்  கோரிக்கை மனுக்களைப் பெற்று   ஆதார் அட்டை, குடும்பஅட்டைகள் வழங்கப்பட்டும் அடிப்படை வசதிகளை  மாவட்ட ஆட்சியர் செய்து வருகிறார் .

இந்நிலையில், அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த கும்பினிபேட்டை மற்றும் கீழ்ப்பாக்கம் ஊராட்சி கன்னியாவேடு ஆகிய கிராமப் பகுதிகளில் இருளர் இன மக்கள் பலஆண்டுகளாக ஜாதிச் சான்றிதழ்கள் இன்றி  வசித்து வருகின்றனர்.  அவர்களின் வாரிசுகள் படிப்புமற்றும் அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் உதவிகள் ஏதுமின்றி பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருவதாகவும்  ஜாதிச் சான்றிதழ் வழங்கிட வேண்டி அரக்கோணத்தை சேர்ந்த அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை சுகந்தி வினோதினி என்பவர் மாவட்ட ஆட்சியர் ,அரக்கோணம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம்  மனுசெய்தார்.  அதில் இருளர்இன மக்களின் வாழ்க்கை கஷ்டங்களையும், குடியிருப்பு பகுதிகளில் உள்ள பிரச்சினைகளையும் தெரியப்படுத்தினார்.

இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் விரைவாக நடவடிக்கை எடுக்க அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியருக்குஉத்தரவிட்டார்.  கோட்டாட்சியர், வட்டாட்சியர் இருளர் சமுதாயத்தினர் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து கும்பினிபேட்டையில் 21பேருக்கும் கன்னியாவேட்டில் 23 என மொத்தம் 44 பேருக்கு சாதிச்சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் இருளர் இன மக்களின் வீடுகளுக்கே சென்று ஜாதிச் சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது பலஆண்டு காலமாக தாங்கள் வாழ்வாதாரமின்று தவித்துவந்த நிலையில் நீண்ட நாள் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் தெய்வமாக வந்து தீர்த்து வைத்ததாக நன்றிகூறிய அப்பகுதி  இருளர்இன மக்கள்  மகிழ்ச்சி தெரிவித்தனர் .

மேலும் சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியர்   அவர்களிடம் பேசுகையில், பள்ளி மாணவ-மாணவிகளை நன்றாக படிக்கவேண்டும் என்றும், எதிர்வரும் தலைமுறையினர் இன்றைய  நிலையை விடுத்து முன்னேறும் வகையில் கல்வி கற்கவேண்டும்.  அரசு உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தர விட்டுள்ளது. என்றும்   பெற்றோர்கள்   குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்றார்.

மேலும் ஜாதிச்சான்றிதழ்கள் இல்லாத நபர்களுக்கும் உரிய விசாரணை மேற்கொண்டு விரைவில் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம்  மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்

இந்நிகழ்வின் போது கோட்டாட்சியர் சிவதாசு, வட்டாட்சியர் பழனிராஜன், தன்னார்வலர் கிரிஜா ஆனந்தன், அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சுகந்தி வினோதினி உடனிருந்தனர்.

Tags:    

Similar News