அரக்கோணம் கடற்படைத்தளம் ஐஎன்எஸ் ராஜாளியில. இரத்ததானமுகாம்.

அரக்கோணத்தில் உள்ள கடற்படைத்தளம் ஐஎன்எஸ் ராஜாளியில் சுதந்திரவிழா கொண்டாட்டத்தையொட்டி இரத்ததான முகாம் நடந்தது

Update: 2021-08-11 13:00 GMT

ஐஎன்எஸ் ராஜாளியின் கொமோடோர் கேப்டன் வினோத் குமார் இரத்த தான முகாமை துவங்கி வைத்தார்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஐ என் எஸ் ராஜாளி கடற்படைத்தளம் உள்ளது. அதில் 1971  போரின் 50 வது ஆண்டு நிறைவடைந்ததையொட்டியும் ஆசாதிகா அமிர்த மஹோத்ஸவ் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்ட உள்ளது .

விழாவின் ,ஒரு பகுதியாக இந்திய கடற்படை ராஜாளி மற்றும் வாலாஜா அரசு மாவட்ட மருத்துவமனையும் இணைந்து இரத்ததான முகாமை நடத்தியது . அரக்கோணம் கடற்படைதளத்திலுள்ள ராஜாளி மருத்துவமனையில் அரசு அறிவித்துள்ள கொரோனோ விதிகளை பின்பற்றியும் பரிசோதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரத்த தான முகாம் நடந்தது.

ஐ என் எஸ் ராஜாளியின் கொமோடோர்கேப்டன்  வினோத் குமார் இரத்த தான முகாமை துவங்கி வைத்தார். முகாமில், கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். நிறைவாக ,கொமோடோர் கேப்டன் வினோத் குமார் இரத்த தானம் செய்தவர்களைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

முகாமில், 82 யூனிட் ரத்தம் வாலாஜா அரசு மாவட்ட மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவ அதிகாரியிடம் வழங்கப்பட்டது..

Tags:    

Similar News