அரக்கோணம் ரயில்வே, கலால் காவல் நிலையங்களில் ஏடிஜிபி சந்தீப் ரத்தோர் ஆய்வு

அரக்கோணம் ரயில்வே மற்றும் கலால் காவல் நிலையங்களில் ஏடிஜிபி., சந்தீப் ரத்தோர் ஆய்வு நடத்தினார்.

Update: 2021-07-29 06:43 GMT

காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஏடிஜிபி., சந்தீப் ரத்தாேர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் இரயில் நிலையத்தில. உள்ள தமிழக இரயில்வே காவல் நிலையம் மற்றும் அரக்கோணம் நகரத்தில் உள்ள மதுவிலக்கு மற்றும் அமுலாக்கப்பிரிவு காவல்நிலையங்களுக்கு வந்த அப்பிரிவு ஏடிஜிபி சந்தீப் ரத்தோர் ஆய்வு செய்தார்.

ஆய்வு செய்ய வந்த அவரை, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி ஓல்பிரகாஷ்மீனா, மதுவிலக்கு மற்றும் அமுலாக்க எஸ்பி பெருமாள், ரயில்வே எஸ்பி தீபா சத்தியன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர், ரயில்வே காவல் நிலையம், மதுவிலக்கு மற்றும் அமலாக்கம் போலீஸ் நிலையங்களில் உள்ள வழக்கு விபரங்கள் குறித்த பதிவேடுகள், முடிக்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள வழக்கு விபரங்களைக் கேட்டறிந்தார். பின்னர், குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார். மேலும், நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது , அரக்கோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், மதுவிலக்கு மற்றும் அமலாக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News