அரக்கோணத்தில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 11 பேர் கைது
அரக்கோணத்தில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 11 பேரைக்கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல்;
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவல் உட்கோட்ட புதிய டிஎஸ்பியாக புகழேந்தி கணேஷ் பொறுப்பேற்றார்.
அரக்கோணம் சப்டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்ட றிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் . அதன்பேரில் போலீஸார் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்நிலையில்,அரக்கோணம், விண்டர்பேட்டை,பழனிப்பேட்டை, அம்மனூர்,குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,கஞ்சா விற்ற இரண்டு பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.