அரக்கோணம் ராம்கோ சிமெண்ட்ஷீட் ஆலை விபத்து: வடமாநில இளைஞர்கள் 2 பேர் மரணம்

கடந்த 17-ஆம் தேதி இரவு கம்பெனியில்உள்ள பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர்

Update: 2021-09-22 16:17 GMT

பைல்படம்

அரக்கோணம் ராம்கோ சிமெண்ட் சீட் கம்பெனியில் ஏற்பட்ட பாய்லர் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த வடமாநில இளைஞர்கள்  இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வின்டர்பேட்டையில் ராம்கோ சிமென்ட் ஷீட் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை சுமார் 30ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது. அதில் 200க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் உட்பட 500க்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். .இந்நிலையில் கடந்த 17ந்தேதி இரவு கம்பெனியில்உள்ள பாய்லர்  அழுத்தக் கோளாறு காரணமாக  வெடித்து விபத்துக்குள்ளானது.

அப்போது பணியில் இருந்த  தொழிலாளி வசந்த்( 23 ) மற்றும் வடமாநில இளைஞர்கள்  முகமது ஜாவித்(21) ,  சர்பர் அலி  (25) , ராகுல்பி (19),பங்கஜ் குமார்( 25), மற்றும் ராம் (19 )ஆகியோர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அனைவரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மற்றும் கீழ்பாக்கம் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்,சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த வடமாநிலத் தொழிலாளர்கள்  பங்கஜ் குமார், சர்தார் அலி ஆகிய இருவரும்    உயிரிழந்தனர். இதுகுறித்து, அரக்கோணம் டவுன் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்..


Tags:    

Similar News