உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி தேசிய பேரிடர் மீட்பு படையினர் மரக் கன்றுகளை நட்டனர்

உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் 4வது பட்டாலியன் 500 மரக்கன்றுகளை நட்டனர்

Update: 2021-06-05 11:45 GMT

பூமி தற்போதைய சுற்று சூழல் காரணமாக வெப்பமயமாகி பருவ நிலை மாற்றங்கள் ஏற்பட்டு, நாளுக்கு நாள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  அதனைப் போக்கும் விதமாக பூமியில் காடுகளைப் பாதுகாத்து தொன்மையான மரங்களை அழிக்காமல் இயற்கைத் தன்மையை பாதுகாத்து முழுமையான பசுமையை உருவாக்கி காற்றில் கலக்கும் மாசுகளைக் களைந்து உலகைத் தூய்மைப் படுத்துவதில் பெருமளவு மரங்கள் நமக்கு தொண்டாற்றி வருவதாக அறிவியலாளர்களின் கூறி வருகின்றனர். 

அதன்படி,   உலக நாடுகள் முழுவதிலும் தன்னார்வலர்கள்மற்றும்  அமைப்புகள் போன்றவை மரங்களை வளர்த்து, பாதுகாத்து வருகிறது. எனவே பூமியின் தற்போதைய சூழல் மற்றம் தடுப்பு செயலாக மரங்களை பாதுகாத்தல்,வளர்த்தல் ஆகியவற்றை நினைவுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் இன்று உலகச் சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் 4வது பட்டாலியன் சீனியர் கமாண்டர் ரேகா நம்பியார் தலைமையில் அதிகாரிகள் மற்றும் படையினர் சேர்ந்து 500 மரக்கன்றுகளை நட்டனர். மேலும் மரங்களை வளர்ப்போம், பாதுகாப்போம் போன்ற உறுதி மொழியினை எடுத்தனர்.  இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News